செய்திகள்
கோப்புபடம்.

போதிய இட வசதி இல்லாததால் உடுமலை பஸ் நிலையத்தில் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பயணிகள்

Published On 2021-11-13 13:20 IST   |   Update On 2021-11-13 13:20:00 IST
பஸ்கள் நிற்ப்பதற்குகான “ரேக்“ முறையாக அமைக்கப்படவில்லை. பயணிகள் காத்திருப்பதற்கான வசதியும் கிடையாது.
உடுமலை:

உடுமலை பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியாக நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.மேலும் சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், மதுரை போன்ற ஊருக்குச் செல்வதற்கு உடுமலை வருகின்றனர். 

இதனால் பஸ்  நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் பஸ்கள் நிற்ப்பதற்குகான "ரேக்" முறையாக அமைக்கப்படவில்லை. பயணிகள் காத்திருப்பதற்கான வசதியும் கிடையாது. 

கோவை மற்றும் பழனி நோக்கி 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் உடுமலையைகடந்து செல்கின்றன. ஆனால் போதிய இடவசதி இல்லாததால் காலை மற்றும் மாலையில் நெருக்கடி காரணமாக பயணிகள் பாதிக்கின்றனர்.

மேலும் பஸ் நிலையத்தில் நகராட்சி நிபந்தனைகளை மீறி நிறைய கடைகள் செயல்படுகிறது. பயணிகள் நிற்பதற்கு இடையூறு ஏற்படுகிறது. இட நெருக்கடியால் அங்கும் இங்கும் அலைந்து ஓரிடத்தில் நிற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். 

பயணிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் முற்றிலும் கிடையாது. மழை மற்றும் வெயில் தாக்கத்தின் போது பயணிகள் வெகுவாக பாதிக்கின்றனர், கிடப்பில் போடப்பட்டுள்ள பஸ் நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News