செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல்

Published On 2021-11-13 01:51 GMT   |   Update On 2021-11-13 01:51 GMT
தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை :

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சசிகலா, டெம்போ வேனில் சென்று நேற்று பார்வையிட்டார். தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலைகள், பிஸ்கட் பாக்கெட், பால் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் சசிகலா வேனில் இருந்தவாறு பேசியதாவது:-

மழைவெள்ளத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள். பயிர்கள் நாசமாகி விவசாயிகளும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றவும் மத்திய அரசு தமிழகத்துக்கு வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களை காப்பற்றத்தான் அரசுகள் இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு மிக விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் நேற்று பயணித்த ‘டெம்போ’ வேனிலும் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிருந்தது.
Tags:    

Similar News