செய்திகள்
பட்டா திருத்தம் - சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்
வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் வருவாய் கிராமந்தோறும் நடக்கும் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
திருப்பூர்:
நில அளவைத் துறையினர் பதிவேடுகளை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது தவறுகள் நிகழ்ந்துள்ளது. அவற்றை திருத்தம் செய்ய வசதியாக வருவாய் கிராமம் வாரியாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் பொங்குபாளையத்தில் நடைபெற்ற முகாமில் ஆர்.டி.ஓ.ஜெகநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு திருத்தம் செய்த கம்யூட்டர் சிட்டாவை வழங்கினார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்:
பட்டா திருத்த முகாமில் நில அளவை எண்,உட்பிரிவு ஆகியவற்றில் ஏற்பட்ட தவறு, பரப்பளவில் ஏற்பட்டுள்ள தவறு, பட்டாதாரர் அல்லது தந்தையார் பெயரில் ஏற்பட்டுள்ள தவறு, உறவு நிலையில் உள்ள திருத்தம், அ பதிவேட்டில் பதிவில்லாமல் இருப்பது, பட்டாதாரர் தரப்பு, தொடர்பில்லாத சர்வே எண்ணில் பதிவானது உள்பட பல தவறுகள் திருத்த வாய்ப்புள்ளது.
வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் வருவாய் கிராமந்தோறும் நடக்கும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்றனர்.