செய்திகள்
கோப்புபடம்

வாக்காளர் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு

Published On 2021-11-12 11:36 IST   |   Update On 2021-11-12 11:36:00 IST
தொற்று குறித்து அச்சப்படாமல் பணியாற்றிய அனைவருக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.
திருப்பூர்:

கடந்த சட்டசபை தேர்தல் செலவுக்கான தொகை ஒதுக்க கோரியும், தேர்தல் பணியாற்றிய அலுவலருக்கு ஊக்கத்தொகை வழங்க கோரியும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறுகையில்:

கடந்த சட்டசபை தேர்தல் செலவின தொகையை முழுமையாக ஒதுக்க வேண்டும். பறக்கும்படை, கண்காணிப்பு குழு, மண்டல அலுவலர், தேர்தல் பார்வையாளர் பயன்படுத்திய வாகனங்களுக்கான வாடகையை வழங்க வேண்டும்.  

தொற்று குறித்து அச்சப்படாமல் பணியாற்றிய அனைவருக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும். 6 மற்றும் அதற்கு அதிகமான தொகுதிகள் உள்ள மாவட்டங்களுக்கு துணை கலெக்டர் நிலையில் தேர்தல் அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் . 

தேர்தல் செலவு தொகையை வழங்காததால் வருவாய்த்துறை அலுவலர்கள், வாடகை கார் உரிமையாளர் உள்பட பல்வேறு நபர்களுக்கு பதில் கூற முடிவதில்லை. போராட்டத்திற்குபின் உரிய நடவடிக்கை எடுக்காததால் நாளை 13,14 மற்றும் 27, 28-ந்தேதிகளில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News