செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை புறநகர் ரெயில் சேவை
சென்னையில் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், புறநகர் ரெயில் சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களால் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவு போன்று காட்சி அளித்தது.
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தால் மூழ்கிய வண்ணம் உள்ளது. இதனால் ரெயில்களை வேகமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று புறநகர் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கியது. அதேபோன்று நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.