செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் அருகே பரிதாபம் - நெஞ்சுவலியால் வேனிலேயே உயிரிழந்த டிரைவர்

Published On 2021-11-11 07:31 GMT   |   Update On 2021-11-11 07:31 GMT
நீண்ட நேரமாக அந்த வேன் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்து ஓட்டுனரை அழைத்துள்ளனர்.
பல்லடம்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் லட்சுமண குமார் (வயது 31). இவர் கடந்த 3 மாதங்களாக பல்லடம் அருகே குங்குமம் பாளையம் பிரிவில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சரக்கு வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று பனியன் கம்பெனியில் இருந்து வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அருகே சரக்குகளை இறக்கிவிட்டு கம்பெனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தை அடுத்த சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது .

இதனால் சரக்கு வேனை ரோட்டோரமாக நிறுத்தியவர் வேனின் ஸ்டீயரிங் மீது சாய்ந்து படுத்து உள்ளார். இந்த நிலையில் நீண்ட நேரமாக அந்த வேன் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்து ஓட்டுனரை அழைத்துள்ளனர். அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லாததால் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வேனில் இருந்து அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து அவரது தந்தை பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
Tags:    

Similar News