செய்திகள்
பெயிண்டரை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான பெயிண்டரை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2021-11-10 17:08 IST   |   Update On 2021-11-10 17:08:00 IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான பெயிண்டரை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வளையக்கரணை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர் கடந்த 2-ந்தேதி இரவு 7 மணியளவில் துணி எடுப்பதற்காக சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள கடைக்கு சென்றார்.

இந்த நிலையில் பார்த்தசாரதியின் செல்போனில் இருந்து அவரது மனைவி தனலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ காட்சி வந்தது. அதில் பார்த்தசாரதி மது போதையில் அமர்ந்து இருப்பதை போன்று வந்தது. அதன் பின்னர் பார்த்தசாரதி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தனலட்சுமியின் செல்போனுக்கு அவரது கணவர் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுடைய கணவர் சாலை விபத்து ஏற்பட்டு இங்கே கிடக்கிறார். உடனடியாக வந்து அவரை மீட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு துண்டித்து விட்டார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தனலட்சுமி அங்கே சிதறிகிடந்த பார்த்தசாரதியின் செல்போன் மற்றும் துணிகளை எடுத்துள்ளார். மேலும் தனது கணவரை தேடி பார்த்தபோது அவரை காணவில்லை.

இதனால் பயந்து போன தனலட்சுமி பாலூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு வாரமாகியும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நேற்று பொதுமக்கள் சிங்கப்பெருமாள் கோவில்-ஒரகடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News