செய்திகள்
மதுபான கடையின் சுவரில் துளையிட்டு ரூ.30 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
மதுபான கடையின் சுவரில் துளையிட்டு ரூ.30 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டை அடுத்துள்ள மேலஉளூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடைக்குள் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மதுபான கடையின் மேற்பார்வையாளர் குமார் கொடுத்த புகாரின் பேரில், ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.