செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒரேநாளில் 3500 கிலோ நெய் காணிக்கை

Published On 2021-10-31 06:45 GMT   |   Update On 2021-10-31 06:45 GMT
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மதுரையைச் சேர்ந்த அன்னை மீனாட்சி உழவாரபணி குழு சார்பில் பக்தர்கள் உழவாரப்பணி செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா புகழ் பெற்றது.

இந்த விழாவில் ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் தீபத் திருவிழா அன்று கோவிலில் சாமி தரிசனம்செய்யவும், பரணி தீபம் காணவும் அனுமதிக்கப்படவில்லை. திருவிழா காலத்தில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் உள்ளூர் பக்தர்கள் வெளியிலிருந்தே மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மகா தீபம் வருகிற நவம்பர் 19-ந்தேதி ஏற்றப்படுகிறது. இதையொட்டி கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மகா தீபத்திற்கு பக்தர்களிடம் நெய் காணிக்கை பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பக்தர்கள் ஒரே நாளில் 3,500 கிலோ நெய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இன்னும் 2000 கிலோ நெய் மட்டும் தேவைப்படுகிறது. அதுவும் விரைவில் காணிக்கையாக வந்துவிடும் என்று கூறப்படுகிறது. கோவிலில் நெய் காணிக்கையாக ஒரு கிலோவிற்கு ரூ.250,அரை கிலோவுக்கு ரூ.150, கால் கிலோவுக்கு ரூ.80 வசூலிக்கப்படுகிறது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மதுரையைச் சேர்ந்த அன்னை மீனாட்சி உழவாரபணி குழு சார்பில் பக்தர்கள் உழவாரப்பணி செய்தனர்.


Tags:    

Similar News