செய்திகள்
கைது

மானாமதுரை அருகே நிலத்தை அளக்க எதிர்ப்பு - 25 பேர் கைது

Published On 2021-10-17 09:17 GMT   |   Update On 2021-10-17 09:17 GMT
மானாமதுரை அருகே நிலத்தை அளக்க கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக 25 பேரை கைது செய்தனர்.
மானாமதுரை:

சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் நெடுஞ்சாலையில் கல்குறிச்சி கிராமம் அருகே தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலம் தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நிலத்தை அளந்து கொடுக்குமாறு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நிலத்தை அளக்க உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க நேற்று சென்றனர்.

அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசாரும், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஒரு தரப்பு பெண்கள் சாமி வந்தது போல ஆடினார்கள். ஒரு பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே ேபாலீசார் நிலத்தை அளக்க எதிர்ப்பு ெதரிவித்த 25 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News