செய்திகள்
காங்கிரசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரசார் மனு

Published On 2021-10-13 13:39 IST   |   Update On 2021-10-13 13:39:00 IST
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

ஈரோடு:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய துரைமுருகன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

இதேபோல் மேலூர் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையில் சில அவதூறு கருத்துக்களை பேசியுள்ளார்.

தொடர்ந்து சீமான் வன்முறை பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொது அமைதியைக்காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

Similar News