செய்திகள்
உப்பு உற்பத்தி

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறைவு- 10 ஆயிரம் பேர் வேலை இழப்பு

Published On 2021-10-12 10:33 GMT   |   Update On 2021-10-12 10:33 GMT
உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் 830 சிறு உற்பத்தியாளர்கள் மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யபடுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு உப்பள பகுதிகளில் 57.2 மி.மீட்டர் பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பு குவியல்களை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் மற்றும் பனைஓலைகளை கொண்டு பாதுகாப்பாக மூடிவைத்துள்ளனர். உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வழக்கமாக அக்டோபர் மாதம் நிறைவடையும் உப்பு உற்பத்தி முன்கூட்டியே இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.

இதனால் 10 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் உப்பளங்களில் உள்ள மோட்டார்கள் மற்றும் உற்பத்திக்கான தளவாட பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முன்கூட்டியே முடிவுக்கு வந்ததால் மழைகாலத்தில் நல்ல விலை கிடைக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News