செய்திகள்
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமம் எனை ஆளும் கண்ண பெருமான் கோவில் அருகே தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க குழிதோண்டி டவர் அமைக்க வேண்டிய பொருட்களை கொண்டு வந்து பணி தொடங்கினர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேட்டைகாரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முடிவு தெரியும்வரை டவர் அமைக்க மாட்டார்கள் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.