செய்திகள்
போலீசார் விசாரணை

மதுரை விடுதியில் பள்ளி நிர்வாகி மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-09-18 15:37 IST   |   Update On 2021-09-18 15:37:00 IST
மதுரை விடுதியில் பள்ளி நிர்வாகி இறந்து கிடந்ததையடுத்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜில் முதியவர் இறந்து கிடப்பதாக திடீர் நகர் போலீசுக்கு தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாதவன் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 63) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வந்தார்.

இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். இதன் காரணமாக சோமசுந்தரம் வீட்டில் இருந்து வெளியேறி மதுரை லாட்ஜில் தங்கினார்.

இந்த நிலையில் அவர் லாட்ஜ் அறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி தெரியவில்லை. இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News