செய்திகள்
கோப்புபடம்

ராஜபாளையத்தில் அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-16 20:56 IST   |   Update On 2021-09-16 20:56:00 IST
அஞ்சலகங்கள் முழுவதும் தனியார்மயமாக்கலை கண்டித்து ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜபாளையம்:

அஞ்சலகங்கள் முழுவதும் தனியார்மயமாக்கலை கண்டித்தும், நடப்பு வங்கி மற்றும் சேமிப்பு வங்கி கணக்குகளில் கூடுதலாக குறியீட்டை அடைவதற்கு கடுமையான பணிப்பழு சுமத்துவதை கண்டித்தும் ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம், மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாடடத்துக்கு பி4 கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

மண்டல தலைவர் சண்முகராஜா பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினார்கள். கிளைச் செயலாளர் காசி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News