செய்திகள்
கோப்புபடம்

10,12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

Published On 2021-09-15 10:56 IST   |   Update On 2021-09-15 10:56:00 IST
கடந்த ஆகஸ்ட் 6 முதல் 19-ந்தேதி வரை துணை தேர்வுகள் நடந்தது.
திருப்பூர்:
 
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் அரசு அறிவித்த திட்டத்தின்படி மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 6 முதல் 19-ந்தேதி வரை துணை தேர்வுகள் நடந்தது. 

திருப்பூர் மாவட்டத்தில் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளி, படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி என நான்கு மையங்களில்  600 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

Similar News