செய்திகள்
சிவகங்கை அருகே கணவரை கொன்ற மனைவி கைது
சிவகங்கை அருகே மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்துள்ள குட்டிதின்னி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜாங்கம். இவரது மனைவி விஜயராணி.
இவர்களுக்கு அபிராமி, அசோகா, வாசுகி என்கிற 3 மகள்களும், கரன்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
ராஜாங்கம் தினமும் மது குடித்து விட்டு மனைவி, குழந்தைகளிடம் தகராறில் ஈடுபடுவார். வழக்கம்போல் வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மனைவி விஜயராணி, கணவன் ராஜாங்கத்தின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்.