செய்திகள்
மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால நிதி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்காததை கண்டித்து இந்திய புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால நிதி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்காததை கண்டித்து மருத்துவமனை எதிரில் இந்திய புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் நாராயணசாமி, தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட தலைவர் சுரேஷ் சந்திரன் உள்படபலர் கலந்து கொண்டனர்.