செய்திகள்
கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர்

Published On 2021-08-24 14:18 GMT   |   Update On 2021-08-24 14:18 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:

உணவு பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி ஒரு வாரத்திற்குள் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் அட்டை வழங்க வேண்டும். வரப்பெறும் ரேஷன் அட்டைகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். ‌வட்ட வழங்கல் அலுவலர்கள் தனிர் கவனம் செலுத்தி பணியாற்றிட வேண்டும்.

மாவட்டத்தில் 614 ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் 3 லட்சத்து 39 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. சில ரேஷன் கடைகளில் பச்சரிசி, பாமாயில் கிடைப்பதில்லை என தெரிய வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்கள் உடனடியாக இரண்டு அரிசியும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும் வகையில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமாயில், பருப்பு போன்ற பொருட்களும் இருப்பில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து நேரடியாக என்னுடைய பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, பொது வினியோகம் துணைப்பதிவாளர் முரளிகண்ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News