செய்திகள்
கோப்புபடம்

ஓச்சேரியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

Published On 2021-08-24 19:45 IST   |   Update On 2021-08-24 19:45:00 IST
ஓச்சேரியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:

சென்னை அல்லிகுளம் பகுதியை சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் தாஸ் என்ற ஆதிகேசவன் (வயது 27). சென்னை சென்டிரலில் கூலி வேலை செய்து வருகிறார். விருத்தாச்சலம் பழமலைநாதர் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல் என்ற சப்பை (21). வண்டலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (19). இவர்கள் இருவரும் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று சென்னையில் இருந்து வேலூருக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். ஓச்சேரியில் இறங்கி டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு கையில் பீர் பாட்டிலை வைத்துகொண்டு ஓச்சேரி பஸ் நிறுத்தத்தில் வேலூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த 3 பேரும் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையில் பீர் பாட்டிலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அவளூர் போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News