செய்திகள்
புதுக்கோட்டையில் சாகசம் செய்யும்போது துயரம்: தீயில் கருகி 19 வயது இளைஞர் உயிரிழப்பு
கராத்தே நிகழ்ச்சியின்போது கையில் துணியை கட்டிக்கொண்டு தீயில் சாகசம் செய்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி கராத்தே நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாலாஜி என்ற 19 வயது வாலிபர் சாகச வகை பிரிவில் கையில் துணியை கட்டிக்கொண்டு அதில் தீயை பற்றவைத்து சாகசம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது.
இதனால் படுகாயம் அடைந்த பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.