செய்திகள்
கோப்புபடம்

கோவில் திருப்பணிக்காக வெட்டப்பட்ட மரங்களை மீண்டும் நட்ட பக்தர்கள்

Published On 2021-08-19 13:27 IST   |   Update On 2021-08-19 13:27:00 IST
மரங்கள் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் நடப்பட்டன.
திருப்பூர்:

பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் 50 ஆண்டு பழமையான வேம்பு மற்றும் அரச மரங்கள் இருந்தன. திருப்பணி மேற்கொள்ள இவற்றை அகற்ற வேண்டியிருந்தது.

இதையடுத்து மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மரங்கள் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் நடப்பட்டன.

இதுகுறித்து கோவில் கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், 

‘மரங்களை வெட்ட மனம் வரவில்லை. இருந்தும் கோவில் திருப்பணிக்காக வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் மரங்களை கருப்பராயன் கோவிலில் நட்டோம். இரண்டு கிரேன்கள், பொக்லைன், லாரி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன என்றனர். கருப்பராயன் கோவிலில் மரம் நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் மாட்டு சாணம், தென்னை நார், களிமண் ஆகியவற்றுடன் 15 கிலோ நவதானியங்கள் போடப்பட்டன.

Similar News