செய்திகள்
அபராதம்

கறம்பக்குடியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-08-14 17:04 IST   |   Update On 2021-08-14 17:04:00 IST
கொரோனா பரவலை தடுக்க முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கறம்பக்குடி கடைவீதி பகுதியில் பேரூராட்சியினர், வருவாய்துறையினர், காவல் துறையினர் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடைவீதியில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 நபர்களுக்கு தலா 200 வீதம் 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள நகை கடை, மளிகைக்கடை மற்றும் இதரகடைகள் என அனைத்து கடைகளிலும் உள்ள வியாபாரிகளிடமும், மக்களிடமும் முக கவசத்தை வழங்கி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தினர்.

Similar News