செய்திகள்
சுடுகாட்டில் வைக்கப்பட்ட நன்கொடை உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சுடுகாட்டில் வைக்கப்பட்ட நன்கொடை உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மணிப்பள்ளம் ரோட்டின் அருகே சுடுகாடு உள்ளது. இதில் ரோட்டரி நிர்வாகத்தினரால் நன்கொடை வசூல் செய்யும் உண்டியல் கண்ணாடி பெட்டியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது தொடா்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலில் ரூ.15 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.