செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி

Published On 2021-08-13 10:27 GMT   |   Update On 2021-08-13 10:27 GMT
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,337 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 48,868 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 34 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 32 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,098 பேர் பலியாகி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,337 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 48,868 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News