செய்திகள்
பொன்னமராவதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி காந்தி சிலை முன்பு காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவை இணைந்து முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலா ரூ.200 மற்றும் ரூ.500 அபராதம் விதித்தனர். அப்போது கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.