செய்திகள்
விஷம்

கோபிசெட்டிபாளையம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-08-11 16:45 IST   |   Update On 2021-08-11 16:45:00 IST
கோபிசெட்டிபாளையம் அருகே தொழில் சரியாக நடைபெறாததால் மனவேதனையில் இருந்த டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோபிசெட்டிபாளையம்:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது 34). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அன்பரசு சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வேன், கார்களை வாடகைக்கு விட்டு வந்தார். அன்பரசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக அவருக்கு தொழில் சரியாக போகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அன்பரசு கடந்த 5-ந் தேதி வி‌ஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி அன்பரசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News