செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

Published On 2021-08-09 21:42 IST   |   Update On 2021-08-09 21:42:00 IST
அரசு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், சிகிச்சை மையங்களில் 33 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,879 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 158 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், சிகிச்சை மையங்களில் 33 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News