செய்திகள்
தற்கொலை

டி.என்.பாளையம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-08-07 18:50 IST   |   Update On 2021-08-07 18:50:00 IST
டி.என்.பாளையம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:

டி.ஜி.புதூர் அருகே உள்ள கொடிவேரிமேட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் கார்த்திக் (வயது 25). இவருக்கு சிறு வயது முதல் தலைவலி இருந்துள்ளது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது பெற்றோர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News