செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

Published On 2021-08-07 09:27 IST   |   Update On 2021-08-07 09:27:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 44 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 20 பேர் வீடு திரும்பினர்.

நேற்றைய நிலவரப்படி 161 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று யாரும் பலியாகவில்லை.

அரசு ஆஸ்பத்திரிகளில் 174 பேரும், சிகிச்சை மையங்களில் 15 பேரும் உள்ளனர்.

Similar News