செய்திகள்
வெறிச்சோடி காணப்பட்ட வேலூர் கோட்டை பூங்கா

கொரோனா பரவலை தவிர்க்க மூடல்- வெறிச்சோடி காணப்பட்ட வேலூர் கோட்டை பூங்கா

Published On 2021-08-05 13:42 IST   |   Update On 2021-08-05 13:42:00 IST
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் காரணமாக வேலூர் கோட்டை பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி சிறு வனஉயிரின பூங்கா மற்றும் மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களும் மூட உத்தரவிடப்பட்டது.

வேலூர் கோட்டை பூங்கா எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் காரணமாக நேற்று வேலூர் கோட்டை பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர். மேலும் பூங்கா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் பூங்கா, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அனைத்து பூங்காக்களும் நேற்று மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Similar News