செய்திகள்
கோப்புபடம்

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மானை சுருக்கு வைத்து பிடித்த 3 பேருக்கு அபராதம்

Published On 2021-08-04 14:50 GMT   |   Update On 2021-08-04 14:50 GMT
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மானை சுருக்கு வைத்து பிடித்த 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை, முயல், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கோடியக்கரை போஸ்ட்மேன் தெருவில் கேபிள் கம்பி வைத்து சுருக்கு வைத்து புள்ளிமானை பிடித்துள்ளனர் சுருக்கில் மாட்டிய புள்ளிமான் இறந்துவிட்டது.

தகவலறிந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் இறந்த ஆண் புள்ளிமானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து விசாரித்தார். விசாரணையில் மானை சுருக்கு வைத்து பிடித்த கோடியக்கரை ஆதிவாசி காலனியைச் சேர்ந்த கார்த்தி (வயசு 29), பொதுவிடைசெல்வன் (25), சலீம் (25) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.

இவர்களை பிடித்து விசாரித்து சுருக்கு வைத்து மானை பிடித்ததற்காக தஞ்சை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நாகை வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதித்தாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags:    

Similar News