செய்திகள்
கோப்புபடம்

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற 18 ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம்

Published On 2021-08-04 16:36 IST   |   Update On 2021-08-04 16:36:00 IST
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற 18 ஷேர் ஆட்டோக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்தார்.
வெளிப்பாளையம்:

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளின் உத்தரவை மீறி நாகை சுற்றுவட்டார பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதுடன், அதிவேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதை தொடர்ந்து தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின்படி, நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் மோட்டார் ஆய்வாளர் பிரபு உள்பட அலுவலர்கள் நாகை பகுதிகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லும் ஷேர்ஆட்டோக்களை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற 18 ஷேர் ஆட்டோக்களுக்கு ரூ.200 ஆயிரம் வீதம் ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.போக்குவரத்து துறை நடைமுறை சட்டத்தை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிப்பது மற்றும், வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Similar News