செய்திகள்
ஆரியான் ஏரி தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் காட்சி

ஆரியான் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

Published On 2021-08-04 08:30 GMT   |   Update On 2021-08-04 08:30 GMT
விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதை தடுக்க, ஆரியான் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தில் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான ஆரியான் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 120 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 70 ஏக்கர் நீள, அகலம் கொண்ட இந்த ஏரியில், ஆக்கிரமிப்புகளால் சுருங்கி தற்போது சுமார் 40 ஏக்கர் நீள அகலம் மட்டுமே உள்ளது.

மேலும் ஏரி ஆழம் இல்லாததால் மழை காலங்களில் பெய்யும் மழைநீரை போதுமான அளவிற்கு தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் தண்ணீரின்றி ஏரிப்பகுதி வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

எனவே மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News