செய்திகள்
கோப்புப்படம்

அதிக மகசூல் பெற திட, திரவ உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

Published On 2021-08-03 16:47 IST   |   Update On 2021-08-03 16:47:00 IST
உயிர் உரங்கள் இடுவதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களில் மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கிறது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் செங்கல்பட்டு நகரத்தில் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் திரவ மற்றும் திட உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கும், அருகிலுள்ள மாவட்டங்களிலும் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இதனை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் நோய்கள் எதிர்க்கும் சக்தியை பயிருக்கு உண்டாக்குகிறது. குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களின் 20 முதல் 25 சதவீதம் சேமிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உரச் செலவு குறைகிறது.

உயிர் உரங்கள் இடுவதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களில் மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கிறது. எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி உயிர் உரங்களை தங்களது பயிர்களுக்கு இடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Similar News