செய்திகள்
ஊர்க்காவல் படை வீரர் அரவிந்த்

கடற்கரைக்கு வந்த பொதுமக்களின் பணப்பையை எடுத்துச் சென்ற ஊர்காவல் படை காவலர்

Published On 2021-08-03 09:37 IST   |   Update On 2021-08-03 09:37:00 IST
பொதுமக்களின் பணப்பையை எடுத்துச் சென்ற ஊர்காவல் படை காவலர் குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ காட்சியால் நாகை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்தவர்கள் காரில் தங்களது பணப்பை உள்ளிட்ட உடைமைகளை வைத்துவிட்டு கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த நாகை மாவட்டம் பணங்குடி பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் அரவிந்த் என்பவர், அவர்களின் பணப்பை உள்ளிட்ட உடைமைகளை தனது இருசக்கர வாகனத்தில் மாட்டி கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவரை மறித்து வாக்குவாதம் செய்ததுடன், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ காட்சியால் நாகை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொது மக்களின் உடைமைகளை ஊர்க்காவல் படை வீரர் எடுத்துக் கொண்டு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News