செய்திகள்
தற்கொலை

விக்கிரமங்கலம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2021-07-30 14:33 IST   |   Update On 2021-07-30 14:33:00 IST
விக்கிரமங்கலம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி மேலத்தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். விவசாயி. இவரது மனைவி வித்யா (வயது 20). இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்த வித்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வித்யாவின் தந்தை விஸ்வநாதன் கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன், விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வித்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வித்யாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஷெல்லா ஞானமணி பிரமிளா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News