செய்திகள்
விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2021-07-27 15:48 IST   |   Update On 2021-07-27 15:48:00 IST
மாநகர் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்கள் இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால் விதைப்பந்துகள் தூவினால் அவை முளைத்து மரங்கள் வளரும்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தை பசுமையாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோடை காலங்களில் வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு போதிய மரங்கள் இல்லாதது ஒரு காரணமாகும். வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள மலைகளில் விதைப்பந்துகள் தூவி பசுமையாக்கும் முயற்சியில் சத்துவாச்சாரியை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகர் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்கள் இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால் விதைப்பந்துகள் தூவினால் அவை முளைத்து மரங்கள் வளரும். எனவே ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளில் அவற்றை தூவ உள்ளோம். இதற்காக இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் விதைப்பந்துகள் வனப்பகுதி மற்றும் மலைகளில் வீசப்படும் என்றார்.

Similar News