செய்திகள்
விபத்து பலி

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

Published On 2021-07-11 17:08 IST   |   Update On 2021-07-11 17:08:00 IST
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:

செங்கம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நூருல்அமின் (வயது 45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News