செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

Published On 2021-06-23 10:23 GMT   |   Update On 2021-06-23 10:23 GMT
நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். 



‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் என்றார்.
Tags:    

Similar News