செய்திகள்
தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வம்

கிராமப்புறங்களில் தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வம்

Published On 2021-06-19 03:54 GMT   |   Update On 2021-06-19 03:54 GMT
தடுப்பூசி போட்டுக்கொள்ள கிராமப்புறங்களில் ஆர்வம் காட்டாத மக்கள் தற்போது தடுப்பூசி திருவிழாவில் ஊசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
திருக்கனூர்:

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா மாநிலம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள், திருமண நிலையங்கள் உள்பட 100 இடங்களில் நடக்கிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கடந்த காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கிராமப்புறங்களில் ஆர்வம் காட்டாத மக்கள் தற்போது தடுப்பூசி திருவிழாவில் ஊசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

திருக்கனூர் பகுதியில் செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் மருத்துவ அதிகாரி டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தடுப்பூசி திருவிழா முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரை இந்த 3 கிராமங்களில் கடந்த 3 நாட்களில் சுமார் 700 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பூசி திருவிழாவில் இன்று கொடாத்தூர் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் திருக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
Tags:    

Similar News