செய்திகள்
கோப்பு படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

Published On 2021-06-04 10:52 GMT   |   Update On 2021-06-04 10:52 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 228 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,136 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 6,490 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2,576 பேர்களில் 2,042 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர். சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், சேலம், நாமக்கல் கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 58,254 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News