செய்திகள்
கோப்புப்படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி - புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு

Published On 2021-06-02 04:07 IST   |   Update On 2021-06-02 04:07:00 IST
கருப்பு பூஞ்சை நோய்க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
பெரம்பலூர்:

பெரம்பலூர் துறைமங்கலத்தில் வசித்து வந்தவர் பொன்.கலியபெருமாள் (வயது 76). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரான இவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி அவர் உயிரிழந்தார். இதேபோல் அருமடல் கிராமத்தை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் அய்யாசாமி (40) கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதேபோல விஜயகோபாலபுரத்தை சேர்ந்த மனோகர் (62) என்பவர் கொரோனா பாதிப்புக்கு பின் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 7 பேர் பாதிப்படைந்திருந்தனர். அவர்களில் வெள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News