செய்திகள்
மாவட்டங்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி - மேலும் 563 பேருக்கு தொற்று
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 563 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மொத்தம் 256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,766 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 84, 59, 48 வயதுடைய ஆண்கள் 3 பேரும், 65, 38 வயதுடைய பெண்கள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 8,061 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,601 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த 85 வயது முதியவரும், 65 வயது மூதாட்டியும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீனாம்படி சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 86 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 35 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 43 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,931 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 5,031 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,845 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.