செய்திகள்
கட்டுப்பாடுகளை மீறிய 22 வாகனங்கள் பறிமுதல்
வாகன சோதனையில் கட்டுப்பாடுகளை மீறிய முக கவசம் அணியாத, இ-பதிவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மங்களமேடு:
முழு ஊரடங்கு அமலில் உள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை இணைக்கும் வெள்ளாற்று பாலம் அருகில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் கட்டுப்பாடுகளை மீறிய முக கவசம் அணியாத, இ-பதிவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழியாக வந்த அனைவருக்கும் கபசுர குடிநீர், கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.