செய்திகள்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர் ராமலிங்கம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்குள் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் அன்னமங்கலம், நெற்குணம் ஆகிய கிராமங்களில் இருந்து இளைஞர்கள் தானாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்றைய தினத்தில் மட்டும் 55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும் இந்த முகாமில் வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி கலியமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.