செய்திகள்
தமிழுக்கு தொண்டாற்றுவதே சி.பா.ஆதித்தனாருக்கு செலுத்தும் அஞ்சலி- கவர்னர் தமிழிசை புகழாரம்
செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர் சி.பா.ஆதித்தனார்.
புதுச்சேரி:
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில பொறுப்பு துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள புகழஞ்சலியில் கூறியிருப்பதாவது:-
எளிய செய்தி ஊடகத்திற்கு நாட்டில் மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் இன்று செய்தி ஊடகமாக மட்டுமல்லாமல் ஒளி ஊடகமாகவும் அவரது முயற்சி வெற்றிகரமாக பரிமளித்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச்செய்த ஐயா சி.பா.ஆதித்தனார் சகலமானவர்களுக்கும் சமமாக தமிழ் செய்திகளை எளியவருக்கும் எளிய பதிப்பாக சென்றடையச் செய்து, செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர்.