செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

அமைச்சர் பெரியகருப்பனின் தாயார் காலமானார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-05-23 17:34 IST   |   Update On 2021-05-23 17:34:00 IST
அமைச்சர் பெரிய கருப்பனை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான கே.ஆர். பெரிய கருப்பனின் தாயார் கரு. கருப்பாயி அம்மாள் இன்று அதிகாலை காலமானார்.

இதையொட்டி அவரது உடலுக்கு அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் சிவகங்கை மாவட்ட எம்.எல். ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், அனைத்து கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கரு.கருப்பாயி அம்மாள் இறுதி சடங்கு திருப்பத்தூர் அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் இன்று மாலை நடக்கிறது.

அமைச்சர் பெரிய கருப்பனை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். 


Similar News