செய்திகள்
விளை நிலங்களில் புதைத்து வைத்திருந்த 56 கேன் எரி சாராயம் பறிமுதல்

தூசி அருகே விளை நிலங்களில் புதைத்து வைத்திருந்த 56 கேன் எரி சாராயம் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2021-05-19 19:03 IST   |   Update On 2021-05-19 19:03:00 IST
தூசி அருகே விளை நிலங்களில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 56 கேன்களில் இருந்த எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தூசி:

வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் சாராய வியாபாரி மணி என்பவரது வீட்டில் எரி சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தூசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தூசி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், கலால் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள விளை நிலங்களில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 56 கேன்களில் இருந்த எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மணி மகன் மோகன்ராஜ், பாலமுருகன், குணசீலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News