செய்திகள்
தற்கொலை

வந்தவாசியில் மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை

Published On 2021-05-14 17:39 GMT   |   Update On 2021-05-14 17:39 GMT
வந்தவாசியில் மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசி:

வந்தவாசி நெமந்தகார தெருவில் வசித்து வந்தவர் பலராமன் (வயது 70). இவருக்கு குடி பழக்கம் உண்டு. சம்பவத்தன்று அவர் தனது மனைவி தனவள்ளியிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் தராததால் மனமுடைந்த பலராமன் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார்.

அவரை, குடும்பத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பலராமன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News